சுபீட்சத்தை முன்னெடுப்பதில் சிங்கர் ஃபினான்ஸ் 20 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றது

வெளியிடப்பட்டது - 25 Nov 2024
banner-image

கனவுகளை நனவாக்க உதவும் தனது பயணத்தில் இருபது ஆண்டுகள் நிறைவை சிங்கர் ஃபினான்ஸ் 2024 இல் பெருமையுடன் கொண்டாடுகின்றது. சௌகரியமான மாதாந்த தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களினூடாக சிங்கர் நுகர்வோர் தயாரிப்புக்களைக் கொள்வனவு செய்வதற்கு அனுசரணையளிக்கும் வகையில், ஒரு நுகர்வோர் நிதி நிறுவனமாக 2004 இல் இது நிறுவப்பட்டது. அது இன்று பல்வகைப்பட்ட தீர்வுகளை வழங்கும் வலுவான நிதி நிறுவனமாக பாரிய வளர்ச்சி கண்டுள்ளது.