2024 ஜனவரி 1ம் திகதி நிதிக் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்காக எமது கிளைகளுக்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கி, புத்தாண்டில் எமது இதயபூர்வமான வாழ்த்துக்களை சிங்கர் ஃபினான்ஸ் தெரிவித்திருந்தது.
இலங்கை மக்களின் கனவுகளையும், அபிலாஷைகளையும் வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ள ஒரு நிதி நிறுவனம் என்ற வகையில், இப்புத்தாண்டு பிறந்த தருணத்தில் "Growing Dreams 2024" என்ற முயற்சியை சிங்கர் ஃபினான்ஸ் ஆரம்பித்து வைத்தது. இந்த திட்டமானது மதிப்புமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு உதவுவது மாத்திரமன்றி, உலகில் அனைத்து மக்களுக்கும் பசுமை என்ற கனவை நனவாக்கும் பரந்த குறிக்கோளையும் கொண்டுள்ளது.
நிலைபேணத்தக்க அபிவிருத்தி என்ற எமது நிறுவன நோக்கத்தை நிலைநாட்டும் முயற்சியாக, #SingerFinanceCares என்ற தொனிப்பொருளின் கீழ் பல்வகைப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் முயற்சிகளை நீண்ட காலமாக சிங்கர் ஃபினான்ஸ் முன்னெடுத்து வந்துள்ளது. 2024 புத்தாண்டின் ஆரம்பம் அத்தகைய மற்றுமொரு முயற்சியாக அமைந்துள்ளது.
உன்னதமான நோக்கங்களை சிந்தனையில் கொண்டவாறு, உங்களுடைய கனவுகளை நீங்கள் நனவாக்கிக் கொள்ள உதவுவதில் சிங்கர் ஃபினான்ஸ் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. 2024 ஆம் ஆண்டில் அனைத்து வகையான வாகனங்களுக்குமான குத்தகை வசதிகள், வாகன கடன்கள், தங்கக் கடன் சேவைகள் உள்ளிட்ட பல்வகைப்பட்ட நிதிச் சேவைகளை அது வழங்கி வந்துள்ளது.