வேலைவாய்ப்புக்கள்
சிங்கர் ஃபினான்ஸ் குடும்பத்தின் அங்கத்தவராக மாறுங்கள்
எமது ஊழியர்களே எமது மாபெரும் சொத்து என்பதை சிங்கர் ஃபினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவம் உண்மையாக நம்புகின்றது. இக்கோட்பாடானது, ஊழியர்களின் மேம்பாடு, அங்கீகாரம் மற்றும் அதிகார வலு ஆகியவற்றில் எமது கவனத்தை முன்னெடுத்துச் செல்கின்றது. ஊழியர்கள் தமக்கு ஆர்வமான தொழில்களை முன்னெடுத்து, தமது திறன்களை பட்டைதீட்டி, மற்றும் தொழில்ரீதியாக தமது அபிலாஷைகளை அடையப்பெறுவதற்கு ஊழியர்களை ஊக்குவிக்கின்ற சூழலொன்றைக் கட்டியெழுப்புவதில் எமது தலைமைத்துவம் அர்ப்பணிப்புடன் உள்ளது. உங்களுடைய பங்களிப்புக்களுக்கு மதிப்பளிக்கப்படுகின்ற மற்றும் உங்களுடைய வளர்ச்சிக்கு முன்னுரிமையளிக்கப்படுகின்ற ஒரு பணியகத்தின் அனுபவத்தைப் பெற எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.
தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக Great Place to Work என்ற அங்கீகாரத்தை சம்பாதித்துள்ளதையிட்டு சிங்கர் ஃபினான்ஸ் மிகவும் பெருமை கொள்கின்றது. இந்த மதிப்பிற்குரிய அங்கீகாரமானது அனைவரையும் அரவணைக்கும், ஆதரவளிக்கும் மற்றும் ஈடுபாடுகளை வளர்க்கும் பணியகத்தைத் தோற்றுவிப்பதில் எமது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. ஊழியர்களின் நலன், தொழில் முன்னேற்றம் மற்றும் பணி-குடும்ப வாழ்க்கை சமநிலை மீது நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு தொடர்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதுடன், சம்பாத்தியமும், நிறைவும் அளிக்கின்ற தொழில்களை நாடுவோரின் அபிமானம் பெற்ற தொழில்தருநராக சிங்கர் ஃபினான்ஸ் நிறுவனத்தை மாற்றியுள்ளது.
பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றை வலியுறுத்துகின்ற, நயமான மற்றும் மதிப்புடன் முன்னெடுக்கப்படுகின்ற பணிக் கலாச்சாரத்தை சிங்கர் ஃபினான்ஸ் நிறுவனம் வளர்த்து வருகின்றது. வலுவான நெறிமுறை விழுமியங்கள் மற்றும் மகத்துவத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றினால் எமது பணியகம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், அணியின் உறுப்பினர் ஒவ்வொருவர் மத்தியிலும் மதிப்பும், ஆதரவும் கிடைக்கப்பெறும் உணர்வு உறுதி செய்யப்படுகின்றது. வெளிப்படையான தொடர்பாடல், மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை நாம் ஊக்குவிப்பதுடன், புதுமையான சிந்தனைகள் தளைத்தோங்கி, ஒவ்வொரு ஊழியரும் வளம் பெறுவதற்கான சூழலை நாம் தோற்றுவிக்கின்றோம்.
சிங்கர் ஃபினான்ஸ் நிறுவனத்தில் இணைந்து கொள்வதால், இலங்கையிலுள்ள மிகப் பாரிய மற்றும் மிகவும் நன்மதிப்புப் பெற்ற கூட்டு நிறுவனங்கள் குழுமமான மதிப்பிற்குரிய ஹேலீஸ் குழுமத்தின் அங்கத்தவராக நீங்கள் மாறுகின்றீர்கள். இவ்வாறு இணைவதால், ஸ்திரத்தன்மை மற்றும் செல்வ வளங்கள் உங்களுக்கு கிடைக்கப்பெறுவது மாத்திரமன்றி, தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மகத்தான வாய்ப்புக்களுக்கும் உங்களுக்கு கிட்டுகின்றன. ஊழியர்கள் தமது திறன்களை மேம்படுத்தி, பல்வகைப்பட்ட பணிநிலைகளில் அனுபவத்தைப் பெற்று, மற்றும் தமது தொழில் வாழ்வை முன்னெடுப்பதற்கு ஹேலீஸ் குழுமத்தின் விசாலமான வலையமைப்பு மற்றும் பல்வகைப்பட்ட தொழில்துறைகள் அவர்களுக்கு வலுவான களமொன்றை அமைக்கின்றன.