banner-image overlay

சூரிய மின்வலு கடன்

சிங்கர் பினான்ஸ் சூரிய மின்வலு கடன் மூலம் சூழலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நிலைபேணத்தகு எரிசக்தி முதலீடுகளுக்கான கட்டுபடியான தீர்வுகள்.

image

‘சிங்கர் சூரிய மின்வலு’ தயாரிப்புக்களை கொள்வனவு செய்வதன் மூலமாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறிக்கொள்வதை எமது சூரிய மின்வலு கடன் தெரிவுகள் இலகுவானதாகவும் மற்றும் கட்டுபடியானதாகவும் மாற்றுகின்றன. குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவுடன், குறைந்த வட்டி வீதங்கள் கொண்ட சௌகரியமான கொடுப்பனவுத் திட்டங்களை வாடிக்கையாளர் பெற்றுக் கொள்ள முடியும். உங்களுடைய நிதி நிலைமைக்கேற்றவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, நெகிழ்வுடனான மீள்கொடுப்பனவு விதிமுறைகளுடன், நிலைபேணத்தகு மற்றும் செலவைக் குறைக்கும் எதிர்காலத்தை நோக்கிய உங்களுடைய பயணத்திற்கு சிங்கர் பினான்ஸ் உதவுகின்றது. 

சிறப்பம்சங்கள், நன்மைகள் மற்றும் பெற்றுக்கொள்வதற்கான தகமை

சிறப்பம்சங்கள், நன்மைகள் மற்றும் பெற்றுக்கொள்வதற்கான தகமை

  • நாடளவிலுள்ள எந்தவொரு சிங்கர் காட்சியறையிலிருந்தும் ‘சிங்கர் சூரிய மின்வலு’ தயாரிப்புக்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இது கிடைக்கப்பெறுகின்றது.
  • குறைந்தபட்சம் 30% ஆரம்ப கொடுப்பனவு தேவைப்படுகின்றது.
  • 6 மாதங்கள் வரையான நெகிழ்வுடனான மீள்கொடுப்பனவுத் திட்டங்கள்.
  • 18% வட்டி வீதம் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது).


தேவையான ஆவணங்கள்

  • சிங்கர் காட்சியறையிலிருந்து பெறப்படுகின்ற, ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சூரிய மின்வலு தொகுதிக்கான உத்தேச விலைப்பட்டியல்

  • பாவனைக் கட்டணப் பட்டியல் அத்தாட்சி - இக்கடனுக்கு விண்ணப்பிப்பவரின் பெயரின் கீழ் பெறப்பட்ட சமீபத்தைய மின்சார கட்டணப் பட்டியல்.

  • இலங்கை மின்சார சபையிடமிருந்து அனுமதி வழங்கப்பட்டமைக்கான படிவம்

  • வாடிக்கையாளர் மற்றும் பிணையாளியின் வருமானம் மற்றும் பாவனைக் கட்டணப் பட்டியல் அத்தாட்சி

நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அணுகுமுறை ஆகியவற்றுக்கு நாம் பெயர்பெற்றுள்ளதுடன், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மிகச் சிறந்த நிதித் தீர்வுகளை நீங்கள் பெற்றுக்கொள்வதை நாம் உறுதி செய்கின்றோம். 

உங்களுக்குத் தேவையான நிதியை குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் விரைவான அங்கீகாரங்களுடன், கடன் நடைமுறையை இலகுவானதாக, விரைவானதாக மாற்றுவதில் எமது அணி அர்ப்பணிப்புடன் உள்ளது.   

ஆம்! உங்களுடைய கடன் விதிமுறைகளை உங்கள் கையில் வைத்திருக்க இடமளித்து, உங்களுக்குடைய நிதித் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நெகிழ்வுடனான மீள்கொடுப்பனவுத் திட்டங்களை நாம் வழங்குகின்றோம்.  

எங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்

எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், அடுத்த வணிக நாளில் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.

நான் ஆர்வமாக இருக்கிறேன் சூரிய மின்வலு கடன்

இந்தத் தளம் reCAPTCHA ஆல் பாதுகாக்கப்படுகிறது மற்றும் Google தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பொருந்தும்.